ஜெயம் ரவியின் அடுத்தப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ளதாக தகவல்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி ‘பொன்னியின் செல்வன்’ படத்தை தொடர்ந்து ‘இறைவன்’, ‘சைரன்’ போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இவரின் அடுத்தப்படத்தை ‘வணக்கம் சென்னை’, ‘காளி’, ‘பேப்பர் ராக்கெட்’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(Visited 10 times, 1 visits today)





