நாமலை ஊக்குவிப்பது நோக்கமல்ல – ஹரின் பெர்னாண்டோ!
நுகேகொடையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி பேரணி நாமல் ராஜபக்சவை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) துணைப் பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கூட்டு எதிர்க்கட்சிப் படைக்கு ஆதரவைப் பெறுவதே இதன் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.





