நெதன்யாகுவை கைது செய்ய திட்டம்: இஸ்ரேல் கடும் விமர்சனம்
ஹமாஸுக்கு எதிரான போரை நடத்தியது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் அரசு அதிகாரிகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தால் அது வரலாற்று அளவில் ஒரு ஊழல் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ராணுவ மந்திரி யோவ் கல்லன்ட் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஹெர்சி ஹலேவி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்றும், இதற்கான கைது வாரண்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விரைவில் வெளியிடும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படை தளபதிகள் மற்றும் மாநிலத் தலைவர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களுக்காக அவர்கள் கைது வாரண்ட்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள், இந்த சாத்தியம் வரலாற்று அளவில் ஒரு ஊழல்” என்று நெதன்யாகு கூறினார்.
இதேபோல் ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பிக்கவும் சர்வதேச கோர்ட்டு ஆராயந்து வருவதாக கூறப்படுகிறது.