தொழுகை நடத்திக்கொண்டிருந்த பாலஸ்தீன நபர் மீது வாகனத்தை மோதிய இஸ்ரேலிய சிப்பாய்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் சாலையோரத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பாலஸ்தீன(Palestine) நபர் மீது துப்பாக்கியுடன் கூடிய இஸ்ரேலிய(Israel) சிப்பாய் ஒருவர் வாகனத்தை மோதியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
“ஒரு பாலஸ்தீனிய நபர் மீது ஆயுதமேந்திய நபர் ஒருவர் மோதிய காட்சிகள் கிடைத்தன, அந்த நபர் ஒரு ரிசர்வ் சிப்பாய்(reserve soldier) என்றும் அவரது இராணுவ சேவை நிறுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் சிப்பாய் என்பவர் ஒரு பகுதிநேர இராணுவ உறுப்பினர் ஆவார், ஆனால் தேசிய அவசரநிலைகள் அல்லது மோதல்களின் போது முழுநேர பணிக்கு அழைக்கப்படுவார்.
இந்நிலையில், அந்த நபர் அவரது அதிகாரத்தை கடுமையாக மீறி செயல்பட்டதால் அவரது ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு பாலஸ்தீன நபர் மருத்துவமனைக்கு சென்று தற்போது வீட்டில் இருக்கிறார். மகனின் இரண்டு கால்களிலும் வலி உள்ளது. மேலும், வீடியோவில் காட்டப்படவில்லை என்றாலும் ராணுவ வீரர் தனது மகன் மீது மிளகு தெளிப்பை(pepper spray) தெளித்ததாக பாலஸ்தீன நபரின் தந்தை மஜ்தி அபு மோகோ(Majdi Abu Mokho) குறிப்பிட்டுள்ளார்.





