ட்ரம்ப்பை சந்திக்கும் இஸ்ரேலிய பிரதமர் : போர் நிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணமாக அமெரிக்கா வந்தடைந்துள்ளார்.
பெஞ்சமின் நெதன்யாகு இன்று (02) காலை வாஷிங்டன், டி.சி.யை வந்தடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தப் பயணத்தின் போது, இஸ்ரேலியப் பிரதமர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பல உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு ஒரு வெளிநாட்டுத் தலைவருடனான அவரது முதல் சந்திப்பு இது என்றும் கூறப்படுகிறது.
ஹமாஸுடனான இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி இடையே பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





