பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானை சந்திக்கவுள்ள இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு இடையே டெல் அவிவில் உள்ள கிரியாவில் போர் அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் மூத்த பாதுகாப்பு ஸ்தாபன அதிகாரிகளுடன் பாதுகாப்பு மதிப்பீடு பேச்சுவார்த்தையை நெதன்யாகு நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்தின் தலைவர்களுடன் ஹமாஸ் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து நெதன்யாகு தொலைபேசி உரையாடல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பயங்கரவாத குழுவின் இராணுவத்தை அழிப்பதற்கான மக்களின் உறுதியை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இந்த நிலையில் இஸ்ரேலின் பிரதமர் அலுவலகம் தனது X பக்கத்தில், ‘ஹமாஸின் இராணுவ மற்றும் ஆளும் திறன்களை ஒழிப்பதற்கான மக்களின் ஒற்றுமை மற்றும் உறுதிப்பாடு குறித்து தலைவர்களிடம் பிரதமர் பேசினார். ஹமாஸ் மீதான இஸ்ரேலின் வெற்றி முழு உலகிற்கும் ஒரு வெற்றியாக இருக்கும் என்று கூறினார். ஹமாஸின் கொடூரமான பயங்கரவாதத்திற்கு எதிராக தன்னை தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமைக்கு ஆதரவு அளித்த தலைவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்’ என கூறப்பட்டுள்ளது.
அத்துடன், பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் மற்றும் டச்சு பிரதமர் ரூட்டே ஆகியோரை நாளை நெதன்யாகு சந்திப்பார் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.