காஸா மீது இஸ்ரேல் நடத்திய குண்டு தாக்குதல் – 9 பேர் பலி – நிறுத்தப்பட்ட உணவு விநியோகம்

காஸா மீது இஸ்ரேல் குண்டு தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் 5 சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காஸா பகுதிக்கான உணவு விநியோகத்தை இஸ்ரேல் இடைநிறுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதன் காரணமாக 10 நாட்களுக்குப் பின்னர் உணவுக்கு தட்டுப்பாடு நிலவக்கூடும் என உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எகிப்து மற்றும் கட்டார் முன்வைத்துள்ள புதிய போர் நிறுத்தத் திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் எதிர் முன்மொழிவை சமர்ப்பித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 1 times, 1 visits today)