காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
காசா பகுதியின் தெற்கு பகுதியை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கான் யூனிஸ் நகரம் தற்போது இஸ்ரேல் ராணுவத்தின் முக்கிய இலக்காக உள்ளது.
அதன்படி நேற்று மட்டும் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 65 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.





