காசாவில் இருந்து 3 பணயக் கைதிகளின் உடல்களை மீட்ட இஸ்ரேல் ராணுவம்
இஸ்ரேலுக்குள் கடந்த அக்டோபர் 7ம் திகதி காசாவின் ஹமாஸ் அமைப்பினர் ஊடுருவி தாக்குதல் நடத்தி பலரை கொன்றனர். மேலும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உள்பட 250க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இதற்கிடையே போர் நிறுத்தம் காரணமாக 130 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். எஞ்சியுள்ள பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் காசாவில் இஸ்ரேல் ராணுவத்தின் தேடுதல் நடவடிக்கையின் போது பிணைக்கைதிகள் மூவரின் உடல்களை மீட்டுள்ளனர்.
அவர்கள் இசை விழாவில் கொல்லப்பட்ட ஷானி லூக்(22) மற்றும் அமித் புஸ்கிலா (28), இட்சாக் கெலரென்டர் (56) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
(Visited 9 times, 1 visits today)