உலகம்

காஸா பள்ளி, பள்ளிவாசல் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; 46ஆக அதிகரித்த உயிரிழந்தோர் எண்ணிக்கை

காஸா வட்டாரத்தில் பாலஸ்தீனக் குடும்பங்கள் அடைக்கலம் புகுந்த பள்ளிக்கூடம் மீதும் பள்ளிவாசல் மீதும் இஸ்ரேலியப் படைகள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியதில் குறைந்தபட்சம் 26 பேர் உயிரிழந்தனர்.

அந்த உயிரிழப்புகளோடு மேலும் 20க்கும் மேற்பட்டோர் வடக்கு காஸாவில் சனிக்கிழமை முதல் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் கூறினர்.

பல மாதங்களுக்குப் பிறகு வடக்கு காஸாவில் இஸ்ரேலிய ராணுவம் முதல்முறை தாக்குதல் நடத்தியதாக அவர்கள் கூறினர்.ஆயினும், ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் மத்திய காஸாவின் டெயர் அல்-பலாஹா வட்டாரத்தில் நிகழ்ந்தது.

அங்குள்ள பள்ளிக்கூடத்திலும் பள்ளிவாசலிலும் ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டு மையம் இயங்கியதாகவும் அவற்றைக் குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.ஆனால், பள்ளிக்கூடம், மருத்துவமனை, பள்ளிவாசல் போன்ற மக்கள் நடமாடும் பகுதிகளை தங்களது இயக்க நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் வழக்கம் இல்லை என்று ஹமாஸ் மறுத்துள்ளது.

“20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ஷுஹாடா அல்-அக்சா பள்ளிவாசல், பக்கத்து வட்டாரங்களில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களுக்காக அடைக்கலம் கொடுத்தது. அங்கு தாக்குதல் நடத்தப்பட்டதை அறிந்து அதிர்ச்சியுற்றேன், என்று இமாம் அகமது ஃபிலீட் கூறினார்.

ஹமாஸ்-இஸ்ரேல் போரின் முதலாம் ஆண்டு நிறைவடையும் வேளையில் காஸாவில் புதிதாகத் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

(Visited 22 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்