உலகம் செய்தி

மத்திய ஈரானில் அராக் பகுதியிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை

மத்திய ஈரானின் மார்க்கஸி மாகாணம், அராக் பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த சில மணிநேரங்களில் அந்தப் பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை ராணுவ நடவடிக்கைகளை
மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன் முக்கிய நோக்கம் ஈரானிய ஆட்சியின் இராணுவ உட்கட்டமைப்பைத் தாக்குவதாகும்.

ஈரானில் உள்ள மக்களுக்கு “உங்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக உடனடியாக வெளியேறுமாறு”
அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, அந்த பகுதிகளில் இருப்பது உயிருக்கு நேரடியாக ஆபத்தாகும் என்றும் IDF தன்னுடைய பாரசீக சமூகக் கணக்கில் தெரிவித்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!