செய்தி

காசா மக்களை தப்பியோடுமாறு எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

காசா மக்கள் அங்கிருந்து மக்களை தப்பியோடுமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காசாவின் மீதான பழிவாங்கும் தாக்குதலிற்கு முன்னதாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹமாசின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் காசா பள்ளத்தாக்கின் மீது தொடர்ச்சியான விமானதாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றது.

இதுவரை 230 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 1000 பேர் வரை காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீன மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முற்றுகைக்குள்ளாகியுள்ள காசா பள்ளதாக்கின் பல பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நகரத்தின் மத்திக்கு சென்று தற்காலிக தங்குமிடங்களில் தங்குமாறு இஸ்ரேலிய இராணுவம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

பல குடும்பங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி ஐநாவின் தற்காலிக தங்குமிடங்களிற்கு செல்கின்றன.

இஸ்ரேல் தொடர்ச்சியான பாரிய விமானதாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!