காசாவில் தனது கோர முகத்தை காட்டும் இஸ்ரேல் : பசியால் உணவு தேடி அலையும் சிறுவர்கள்!

காசாவில் அதிகரித்து வரும் பஞ்சத்தை ஏற்படுத்திய இஸ்ரேலின் முற்றுகைக்கு மத்தியில் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காசாவில் குழந்தைகள் இடிபாடுகளிலும் குப்பைகளிலும் தேடுவதை சமீபத்திய படங்கள் காட்டுகின்றன.
30,000 க்கும் அதிகமானோர் இறந்த தேசத்தில் மனிதாபிமான உதவி நெருக்குதல் பஞ்சத்தை உருவாக்குவதால் பலர் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
UNICEF, காசா “பஞ்சத்தின் விளிம்பில்” இருப்பதாக கூறியுள்ளது. மனிதாபிமான தொழிலாளர்களை ரஃபா கடவைக்கு அணுக இஸ்ரேல் அனுமதிக்கவில்லை என்றும் ஐநா அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையிலேயே உணவுக்காக ஏங்கும் குழந்தைகள் தெருக்களில் உணவுகளை தேடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 32 times, 1 visits today)