உலகம் செய்தி

ஹார்முஸை மேற்பார்வையிட்ட ஈரானிய கடற்படைத் தளபதி பலி – இஸ்ரேல் அறிவிப்பு

உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணை முற்றுகையை மேற்பார்வையிட்டு வந்த ஈரானிய கடற்படைத் தலைவர் அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

அவர் “நேரடியாகப் பொறுப்பானவர்” எனக் குற்றம் சாட்டிய இஸ்ரேல் காட்ஸ், அவர் குண்டு வைத்து கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த நீரிணை, உலகின் மிகப் பரபரப்பான எண்ணெய் கப்பல் போக்குவரத்து வழிகளில் ஒன்றாகும்.

கடந்த மாதம் தொடங்கிய மோதலுக்கு பின்னர், ஈரான் இதை முற்றுகையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் உலகளாவிய அளவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் பணவீக்க அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக கொள்கை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையில், அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயங்குகிறது எனக் கூறியுள்ளார்.

ஆனால், ஈரான் இந்தக் கூற்றை மறுத்துள்ளது. பேச்சுவார்த்தையை ஒப்புக்கொண்டால், தங்கள் சொந்த மக்களிடமிருந்து எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

போர் நிலைமையை முடிவுக்குக் கொண்டுவர ஐந்து நிபந்தனைகளை ஒரு ஈரானிய அதிகாரி முன்வைத்துள்ள நிலையில், அமெரிக்கா சார்பில் 15 அம்சத் திட்டம் முன்வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், லெபனான் மற்றும் அபுதாபி பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்கின்றன. அபுதாபியில் இடைமறிக்கப்பட்ட ஏவுகணையின் சிதறல்களில் இருவர் உயிரிழந்ததாகவும், அது ஈரானிலிருந்து வந்ததாகக் கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!