ஸ்பெயின் இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் இராஜதந்திர மோதல்
ஸ்பெயின் பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸ், “சர்வதேச மனிதாபிமானச் சட்டத்திற்கு இணங்க இஸ்ரேல் மீது கடுமையான சந்தேகம் உள்ளது” என்று கூறியதையடுத்து, இஸ்ரேலுடனான இராஜதந்திர மோதலை ஆழப்படுத்தியுள்ளார்.
அவரது சமீபத்திய கருத்து மூர்க்கத்தனமானது என இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தும் கொடிய தாக்குதலைத் தொடர்ந்து, அதை ஒழிப்பதே இலக்கு என்று இஸ்ரேல் கூறுகிறது.
அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்கும் காசாவிற்கும் இடையிலான எல்லை வேலியை தீவிரவாதிகள் உடைத்ததில் குறைந்தது 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 240 க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
அதற்குப் பிறகு, இஸ்ரேலின் பதிலடியில் 15,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
பின்னர் அவர் பெல்ஜியப் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூவுடன் இஸ்ரேலுக்குப் பயணம் செய்து, பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாஹுவிடம், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையைப் பாதுகாக்கும் அதே வேளையில், பாலஸ்தீனியர்களின் உயிரிழப்புகள் “உண்மையில் தாங்க முடியாதவை” என்று கூறினார்
ஹமாஸ் செய்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு முழுப்பொறுப்பையும் இரு பிரதமர்களும் ஏற்கவில்லை என்று குற்றம் சாட்டிய இஸ்ரேல், அவர்களின் “தவறான கூற்றுக்கள்… பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கின்றன” என்றும் கூறியது.
ஸ்பெயினின் வெளியுறவு மந்திரி இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இஸ்ரேல் ஸ்பெயினில் உள்ள தனது தூதரை ஆலோசனைக்கு அழைத்துள்ளது