மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் தாக்க தயாராகும் இஸ்ரேல் – வெளியேற்றப்படும் பாலஸ்தீனர்கள்

காஸாவில் மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகளில் இராணுவ நடவடிக்கையைத் தீவிரப்படுத்த இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனால் அங்குள்ள பாலஸ்தீனர்களை வேறு இடங்களுக்கு மாற்றிவிடவிருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
மக்கள் காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள பாதுகாப்பான வட்டாரம் என்று கூறப்படும் இடங்களுக்கு மாற்றப்படுவர் என்று இஸ்ரேல் கூறியது.
குடியிருப்பாளர்களுக்குக் கூடாரங்கள் வழங்கப்படும் என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.
இடமாற்ற நடவடிக்கைகள் எப்போது தொடங்கும் என்பது தெரிவிக்கப்படவில்லை. புதிய ராணுவ நடவடிக்கைகளுக்கான திட்டங்கள் வகுக்கப்படுவதாய் இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சர் தெரிவித்தார்.
காஸா நகரில் கிட்டத்தட்ட 1 மில்லியன் பாலஸ்தீனர்கள் வசிக்கின்றனர்.
(Visited 3 times, 3 visits today)