இஸ்ரேல் – பலஸ்தீன் மோதல் : கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்!
இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் கடுமையான தாக்குதல் நடவடிக்கைகளால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலை உலக எண்ணெய் விலை உயர்வை பாதிக்கலாம் என சர்வதேச விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பல்வேறு வர்த்தக தடைகள் விதிக்கப்பட்டாலும், ஆசிய சந்தைக்கு ஈரானின் கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்கிறது. ஆனால் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தீவிரமடைந்தால் ஈரானின் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபடுவதை தவிர்க்க முடியாது என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று (09.10) பிரென்ட் ரக கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 4 டொலர்களால் அதிகரித்துள்ளது. இதன்படி இதன் புதிய விலை $86 அமெரிக்க டொலர்களாகும்.
(Visited 4 times, 1 visits today)