இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் தீவிரம் – ஜெருசலேமில் சிக்கியுள்ள தமிழர்கள்
தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து பாலஸ்தீன ராக்கெட்டுகள் மூலம், மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து அங்கு போர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வந்தது.
இந்த நிலையில், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது. இந்த போரை தொடர்ந்து, இஸ்ரேல் போர் நிலையை அறிவித்து, மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
இந்த போரை தொடர்ந்து, இஸ்ரேல் போர் நிலையை அறிவித்து, மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய நிலையில், ‘Operation Iron Sword’ என்ற பெயரில், பதுங்கியிருந்த ஹமாஸ் குழுவினர் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த போரில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த 15 தமிழர்கள் ஜெருசலேமில் பணியாற்றுவதாகவும், போர் தீவிரமடைந்து வருவதால் தங்களை மீட்குமாறு தொலைபேசி மூலம் 15 தமிழர்களும் கோரிக்கை விடுத்ததாக அயலகத் தமிழர் நல வாரியம் தெரிவித்துள்ளது.
தங்களை தொடர்பு கொண்டால் இஸ்ரேலில் இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அயலகத் தமிழர் நல வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்த பொறியாளர்களும் அங்கு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள தமிழர்கள் உதவி பெற 8760248625, 9600023645 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.