ஈரான், லெபனான் மீது இஸ்ரேல் உக்கிர தாக்குதல்! தொடரும் பதற்றம்!!
ஈரான் மற்றும் லெபனான்மீதான வான் வழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கமைய தெஹ்ரானில் உள்ள முக்கிய அரசு கட்டமைப்புகள் மற்றும் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேலிய இராணுவம் குண்டு மழை பொழிந்துவருகின்றது.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்க படைகள் வரலாற்று சிறப்புமிக்க ஒருங்கிணைப்பை வழங்குகின்றது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
எதிரிகளின் வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை தளங்களை சிதைப்பதே தங்களின் முதல் கட்ட நோக்கம் என்றும் கூறியுள்ளது.
ஈரானும் பதிலடி தாக்குதலை நடத்திவருகின்றது. இதனால் மத்திய கிழக்கில் நிலைமை மோசமடைந்துவருகின்றது.
அதேவேளை, லெபனானில் வெளியேற்ற உத்தரவுகளால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
ஈரானிய ஆட்சியை மேலும் பலவீனப்படுத்த கூடுதல் அதிரடித் திட்டங்கள் உள்ளதாக இஸ்ரேலிய இராணுவத் தளபதி எச்சரித்துள்ளார்.





