உலகம் செய்தி

Hezbollah அமைப்பை இலக்கு வைத்து இஸ்ரேல் உக்கிர தாக்குதல்: பாலங்கள் தகர்ப்பு!

ஹிஸ்புல்லா Hezbollah அமைப்பை குறிவைத்து லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் இவ்வாறு வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய உறுப்பினர்களைக் கொன்றுள்ளதாகத் தெரிவித்த இஸ்ரேல், தற்போது அவ்வமைப்பின் உட்கட்டமைப்புகளை அழிப்பதில் தீவிரம் காட்டிவருகின்றது.

குறிப்பாக, ஹிஸ்புல்லா அமைப்பினரின் நடமாட்டத்தைத் தடுக்க லிட்டானி ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்களைத் தகர்க்குமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

எல்லையோர கிராமங்களில் உள்ள வீடுகளை அழிப்பதன் மூலம் இந்தத் தரைவழிப் போரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

நீண்டகாலமாக நடைபெற்று வரும் இந்தப் போர் பதற்றம், தற்போது லெபனானின் தெற்குப் பகுதிகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!