உலகம் செய்தி

சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறியுள்ளது – பலஸ்தீன முன்னணி தலைவர் ஆதங்கம்

காசாவில் இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறியுள்ளதாக தெரிவித்த பலஸ்தீன தேசிய முன்னணி பொதுச் செயலாளர் முஸ்தபா பர்கோதி (Mustafa Barghouti) உலகம் இதனை கண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

கட்டார் தலைநகர் தோஹாவில் இன்று 17 ஆவது அல் ஜசீரா மன்றம் ஆரம்பமான நிலையில் இம்மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“காசாவில் போர் முற்றிலும் ஒருதலைப்பட்சமாக நடக்கிறது. இஸ்ரேல்ஏற்கனவே 1,500 க்கும் மேற்பட்ட முறைகள் சட்டத்தை மீறியுள்ளது, அமெரிக்கா இதனை அனுமதிக்கிறது.

இஸ்ரேல் ஒப்பந்தத்தை நடைமுறையில் செயல்படுத்தவில்லை. ரஃபா கடவை தற்போது திறக்கப்பட்டிருந்தாலும், மக்கள் மிகக் குறைந்த அளவில் அனுமதிக்கப்படுகின்றனர்.
கடக்கும் போது பயங்கரமான கேள்விகள், துன்புறுத்தல்கள், சில சமயங்களில் சித்திரவதியும் எதிர்கொள்ளகின்றனர்” என ஆதங்கம் வெளியிட்டார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!