சிரியாவில் நிலத்தடி ஏவுகணை தொழிற்சாலை – 3 மணி நேரத்தில் தரைமட்டமாக்கிய இஸ்ரேல்
சிரியாவில் நிலத்தடியில் ஈரான் ஏவுகணை தயாரிப்பு ஆலை ஒன்று அமைத்திருந்தது.
இந்த 3 மணி நேரத்தில் அழித்து தரைமட்டமாக்கிய இஸ்ரேல் ராணுவம் அது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 120 பேர் கொண்ட எலைட் விமானப் படைப்பிரிவு கமாண்டோக்கள் இந்த ஆபரேஷனில் ஈடுபட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்த இந்த ஆலையிலிருந்து ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஆயுதங்கள் சப்ளை செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
நிலத்துக்குக் கீழ் 230 ல் இருந்து 430 அடி ஆழத்தில் இந்த ஆயுதத் தொழிற்சாலை அமைந்திருந்ததால் வானிலிருந்து தாக்கி அழிப்பது இயலாக காரியமாக இருந்தது
(Visited 2 times, 1 visits today)