ஜெருசலேமில் உள்ள ஐ.நா தலைமையகத்தை இடித்த இஸ்ரேல்
கிழக்கு ஜெருசலேமில்(Jerusalem) உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி முகமை(UNRWA) தலைமையகத்தை இடிக்கும் பணியை இஸ்ரேலிய குழுவினர் தொடங்கியுள்ளனர்.
காசா(Gaza) பகுதி மற்றும் மேற்கு கரையில் நடைபெற்று வரும் மோதல்களால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை ஐக்கிய நாடுகள் அமைப்புகள் தொடர்ந்து வழங்கி வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி முகமை, ஹமாஸ்(Gaza) இயக்கத்திற்கும் பாலஸ்தீன போராளிகளுக்கும் ஆதரவாக செயல்படுவதாக இஸ்ரேல் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு மத்தியில் கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி முகமை தலைமையகத்தை இடிக்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஐக்கிய நாடுகள் அமைப்பை நேரடியாக குறிவைக்கும் செயல் என்றும் இது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.





