போர் நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்தது பெயருக்கு மட்டுமா? ரத்தத்தில் மூழ்கும் காசா
தொடர்ச்சியான மனிதாபிமான நெருக்கடி மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு மத்தியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தது குறித்து காசாவில் உள்ள பலஸ்தீனியர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் தொடங்குவது குறித்து அமெரிக்கா அறிவித்த போதிலும், இஸ்ரேலிய படைகள் காசா முழுவதும் கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்துள்ளன.
கடந்த ஆண்டு ஒக்டோபரில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து சுமார் 451 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் காசா முழுவதும் இஸ்ரேலிய படைகளால் சுமார் 71,441 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 171,329 பேர் காயமடைந்துள்ளனர்.





