போர் நிறுத்தத்தை அப்பட்டமாக மீறிய இஸ்ரேல் – கடும் கோபத்தில் ஹமாஸ்

போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அப்பட்டமாக மீறியுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
கட்டார் மற்றும் எகிப்து தலைமையிலான மத்தியஸ்த முயற்சிகளையும் தடம் புரளச் செய்யும் முயற்சியை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளதாக மூத்த உறுப்பினர் இஸ்ஸாத் அல் – ரிஷ்க் (Issaad al-Rishq) தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் தொடர் தாக்குதல் முழுமையான சரிவை நோக்கி கொண்டு செல்வதாக இஸ்ஸாத் அல் – ரிஷ்க் கூறினார்.
காஸாவின் ராபா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் விமான தாக்குதல் நடத்திய நிலையில் இவ்வாறு அவர் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே உயிரிழந்த பிணையாளிகளின் உடல்களை ஒப்படைப்பது தொடர்பாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே பூசல் நீடித்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 6 times, 6 visits today)