போர் நிறுத்தத்திற்கு மத்தியில் காசாவை தாக்கிய இஸ்ரேல் – 12 பேர் பலி!
காசாவில் இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் குறைந்தது 12 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் தெற்கு காசாவில் உள்ள இடங்களை குறிவைத்து தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் காசா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடம் மற்றும் கான் யூனிஸில் உள்ள ஒரு கூடாரம் ஆகியவை சேதமடைந்துள்ளன.
காசா நகரில் நடந்த தாக்குதலில் ஒரு தாய், 03 குழந்தைகள் மற்றும் ஒரு உறவினர் கொல்லப்பட்டதாக ஷிஃபா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் கூடாரத்தில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் ஒரு தந்தை, அவரது மூன்று குழந்தைகள் மற்றும் மூன்று பேரக்குழந்தைகள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டதாக நாசர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தம் அமுலில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும் அவ்வப்போது இடம்பெறும் இவ்வாறான தாக்குதல்கள் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் குறித்த நம்பிக்கையை இழக்க செய்துள்ளன.





