உலகம்

மத்திய காசாவில் இஸ்ரேல் தீவிரத் தாக்குதல்: 24 மணி நேரத்தில் 54 பாலஸ்தீனர்கள் பலி!

மத்திய காசாவில் இஸ்ரேலின் ராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதால் 24 மணி நேரத்தில் 54 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், 20 பாலஸ்தீன போராளிகளை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று தொடங்கிய காசா மீதான இஸ்ரேலின் போரில் குறைந்தது 38,848 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதோடு, 89,459 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 என மதிப்பிடப்பட்டுள்ளது, ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் காசாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மத்திய காசாவில் இஸ்ரேலின் ராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதால் 24 மணி நேரத்தில் குறைந்தது 54 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

உக்ரைன், பாலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பியுள்ளது. இது குறித்து உக்ரைன், “பாலஸ்தீன மக்களுக்கு 1,000 டன் கோதுமை மாவை அனுப்பியிருக்கிறோம். பாலஸ்தீனத்துக்காக செய்யும் உதவிகளில் இது முதன்மையானது. இந்த பொருட்கள் ஒரு மாதத்திற்கு 101,000 பாலஸ்தீன குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும்” என தெரிவித்துள்ளது. பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.வின் ஏஜென்சி (UNRWA) அதன் 26 சுகாதார மையங்களில் 10 மட்டுமே தற்போது காசா பகுதியில் செயல்பட்டு வருவதாக கூறுகிறது. சவூதி அரேபியா இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களை கண்டித்துள்ளது

(Visited 65 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்