மோசமான நிலையில் 2.3 மில்லியன் பாலஸ்தீனியர்கள்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் நேற்றுடன் முடிவுக்கு வந்ததுள்ளது இந்நிலையில், கட்டார் நாட்டின் மத்தியஸ்த பேச்சுவார்த்தையின் பலனாக, கூடுதலாக 2 நாட்களுக்கு போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.
கத்தார் அறிவித்த இரண்டு கூடுதல் நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தம், மேலும் நீட்டிப்புகளுக்கான நம்பிக்கையை எழுப்பியது,
தற்காலிக போர் நிறுத்தமாவது தேவை என உலக நாடுகள் வலியுறுத்தின. இதற்காக கத்தார், எகிப்து, அமெரிக்கா போன்ற நாடுகள் எடுத்த முயற்சியின் பலனாக 4 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் சம்மதம் தெரிவித்தது.
இந்த ஒப்பந்தபடி போர் நிறுத்தத்துக்காக 50 இஸ்ரேலிய பிணையக்கைதிகளை விடுவிக்க ஹமாசும், அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் இருக்கும் 150 பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய இஸ்ரேலும் உறுதி அளித்தன. இந்த ஒப்பந்தப்படி கடந்த 24-ந் திகதி முதல் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
இந்தநிலையில்,3-வது கட்டமாக 13 இஸ்ரேலியர்கள், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சிறுமி உள்பட நான்கு வெளிநாட்டினர் என 17 பேரை விடுவித்தது ஹமாஸ். ஹமாஸ் விடுவித்த சிறைக் கைதிகள் எகிப்தின் ரபா எல்லையில் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஹமாஸ் விடுவித்த பிணைக்கைதிகளில் இஸ்ரேலியர்கள் 13 பேரும், அமெரிக்கா,தாய்லாந்தைச் சேர்ந்த 4 பேரும் அடங்குவர். அதற்கு பதிலாக இஸ்ரேல், 33 சிறுவர்கள் உட்பட 39 பாலஸ்தீனர்களை விடுவித்தது. இஸ்ரேலால் விடுவிக்கப்பட்ட பாலஸ்தீன கைதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் போர் நிறுத்தத்தை நீட்டிக்க விரும்புவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
போர் காரணமாக 2.3 மில்லியன் பாலஸ்தீனியர்கள் மோசமான நிலையில் உள்ளனர். இந்நிலையில் தற்காலிக போர் நிறுத்தம் காசாவிற்கு மேலும் உதவியை அனுமதிக்கிறது.