லெபனான்மீதும் கை வைத்தது இஸ்ரேல்: தாக்குதலில் பலர் பலி!
ஈரான்மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேல் Israel தற்போது லெபனான்மீதும் Lebanon தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் செயல்படுகின்றது. அவ்வமைப்பு ஈரான் ஆதரவு பெற்ற ஆயதபடையென கருதப்படுகின்றது.
இந்நிலையில் மேற்படி தாக்குதலில் குறைந்தபட்சம் 31 பேர் பலியாகியுள்ளனர் என்று லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 149 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகள்மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.





