கடல் வழியாக காசா பகுதிக்குள் உதவிகள் நுழைய அனுமதிக்கும் இஸ்ரேல்
இஸ்ரேல் முதல் முறையாக, கடல் வழியாக காசா பகுதிக்குள் மனிதாபிமான உதவிகளை நுழைய அனுமதிக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸால் நிதியுதவி அளிக்கப்படும் என்றும், பரந்த அளவிலான மனிதாபிமான உதவிகளை ஏற்றிய கப்பலை முதலில் சைப்ரஸுக்கு அனுப்பும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
உதவி பின்னர் இஸ்ரேலிய பிரதிநிதிகளால் பரிசோதிக்கப்பட்டு காசா கடற்கரையில் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவியின் முதல் சோதனை அடுத்த வாரம் தொடங்கும் ரம்ஜான் மாதத்திற்கு முன்னதாக நடைபெற வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம் கேட்டுக் கொண்டுள்ளது.





