நீதியில்லா நாடா இலங்கை?
நீதித்துறையும் இலங்கையில் இனமயமாக்கப்பட்டு விட்டது என்பதற்கான எடுத்துக்காட்டுத்தான் முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜாவின் பதவி விலகலும் நாட்டை விட்டு வெளியேற்றமும். அரசியல் வாதிகளால் பயமுறுத்தப்பட்டிருக்கிறார். சட்டமா அதிபர் காரியாலயத்தினால் அவர்மீது கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளது. புலனாய்வுத்துறையினர் கழுகுகள் போல் வட்டமிட்டு பயப்படுத்தி உள்ளனர். அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டிருக்கிறது. அவரின் பெயர் குறிப்பிட்டு மேல் முறையீட்டு நீதி மன்றில் இரண்டு வழக்குக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்மை. அவர் எடுத்த முடிவக்கு காரணங்களாகும் ஒரு நீதிபதிக்கே இக்கெதியென்றால் சாதாரண பொதுமகன்pன் நிலை என்ன என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
இந்த நாட்டின் நீதித்துறையும் அரசியல் வாதிகளின் பிடிக்குள் அகப்பட்டு தனது சுதந்திரத்தையும், தன்னாதிக்கத்தையும் இழந்து கொண்டிருக்கிறது என்பதற்கு தகுந்த உதாரணமாகிவிட்டது முல்லைத்தீவு நீதிபதியின் பதவி துறப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் நீதிபதியாக கடமையாற்றிவந்த சிரேஷ்ட நீதிபதியான ரி. சரவணராஜா தான் வகித்த அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்து விட்டு (துறந்து) நாட்டை விட்டும் வெளியேறியுள்ளார். அவர் வழங்கிய முல்லைத்தீவு குருந்தூர்;விகாரை மற்றும் ஆதிஐயனார் ஆலய தீர்;ப்பு தொடர்பாக ஏற்பட்ட சவால்கள், நெருக்கடிகள், பயமுறுத்தல்கள் காரணமாக உயிர் அச்சுறுத்தலுக்குப்பயந்து தனது பதவிகளைத்துறந்து நாடு விட்டு சென்றுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது..
குருந்தூர் விகாரை தொடர்பாக அரால் வழங்கிய கட்டளையை ஏற்க விரும்பாத பேரின அரசியல் வாதிகள், குறிப்பாக முன்னாள் பொதுஜன பெரமுன அமைச்சரும் பாரளுமன்ற உறுப்ப்னருமாகிய சரத்வீரசேகரா அதேபோன்று விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அவருக்கு கொடுத்த எச்சரிக்கை அச்சுறுத்தல் காரணமாக பதவி துறந்து நாட்டை விட்டு ஓடவேண்டிய அவலம் ஏற்பட்டிருக்கிறது.
தான் வழங்கிய நீதி மன்ற கட்டளையை மாற்றி அமைக்குமாறு சட்டமா அதிபர் காரியாலயத்தால் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமா இந்த முடிவுக்க தான் வந்திருப்பதாக நீதிபதி சரவணராஜா ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார். அவரது விளக்கப்படி சட்டமா அதிபர் தன்னை தனது அலுவலகத்தில் (21.9.2023) சந்திக்குமாறு அழைப்பு விட்டதற்கு அமைய அவரை சந்தித்தபோது குருந்தூர் மலை கட்டளையை மாற்றி அமைக்குமாறு அழுத்தம் பிரயோகித்தனர் என்றும் இதனால் தான் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங் கொடுக்கவேண்டி இருந்தது.
என்றும், அது மட்டுமன்றி தனக்கு எதிராக மேல் முறையீட்டு நீதி மன்றில் தனிப்பட்ட தனது பெயரை குறிப்பட்டு இரு வழக்குக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் தான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை மட்டுன்றி நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ் நிலைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி குருந்தூர்மலை விகாரை மற்றும் ஆதி ஐயனார் ஆலயம் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட கட்டளையால் விசனமடைந்துள்ள தென்னிலங்கை கடும் போக்காளர்கள் மற்றும் அரசியல் வாதி களின் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்ட நிலையிலையே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவரால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவருக்கு விடுக்கப்பட்ட அரசியல் சார்ந்த எச்சரிக்கையில் பாராளுமன்த்தில் அங்கம் வகிக்கும் பொதுஜன பெரமுன உறுப்பினர் சரத்வீரசேகரா அண்மையில் குருந்தூர் மலைக்கு தனது குழுவினரோடு பிரசன்னமாகியிருக்கிறார். அங்கு கடமையின் நிமித்தம் சென்ற நீதிபதி சரவணராஜா குறிப்பிட்ட களத்தில் யாரும் இருக்க முடியாது என்ற கட்டளையை பிறப்பித்திருக்கிறார். இதனால் தனது பாராளுமன்ற கௌரவத்துக்கு நீதிபதி இழுக்கு ஏற்படத்தியள்ளார் என்ற காரணத்தைக்காட்டி மறுவாரம் பாராளுமன்றில் உரையாற்றிய (9.7..2023) சரத்வீரசேகரா இவ்வாறு கூறி நீதிபதியை தாக்கியிருந்தார். “குருந்தூர்மலை விகாரையிலிருந்து எங்களை வெளியேறுமாறு உத்திரவிடும் அதிகாரம் முல்லைத்தீவின் நீதிபதியான (சரவணராஜா) தமிழ் நீதிபதிக்கு இல்லை. குருந்தூர்மலை தொல்லியல் மற்றும் மரபுரிமை தொடர்பில் கேள்வி எழுப்பும் அதிகாரமும் தமிழ் நீதிபதிக்கு கிடையாது. அத்துடன் இலங்கை சிங்களபௌத்த நாடு என்பதை குறித்த தமிழ் நீதிபதி மறந்துவிடக்கூடாது என் பாராளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்தது மாத்திரமன்றி தென்னிலங்கை முழுவதும் இதை பிரச்சாரப்படுத்தியுமிருந்தார்.
இதேவேளை பாரளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல்வீரவன்ச தலைமையிலான குழுவினர் மல்லைத்தீவ நீதிபதி பக்க சார்பாக நடந்து கொள்கிறார் எனக்குற்றம் சாட்டி (21.8.2023) நீதி சேவை ஆணைக்குழுவிடம் முறைப்பாடுசெய்தமை மற்றும் புத்தசாசன அமைச்சரின் கடுமையான அறிக்கைகள் என்பன நீதிபதி சரவணராஜாவை நேரடியாக தாக்கும் கருத்துக்கொண்டதாகவே அமைந்து காணப்பட்டது.
சரத்வீரசேகரா கடந்த 21.6.2023 பாராளு மன்றில் உரையாற்றும்போது பின்வருமாறு கூறியிருந்தார். “வடக்கிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் பிரபாகரனின் போக்கிலையே நடக்கப்பார்க்கிறார்கள் சிங்கள மக்களின் பொறுமையை, இயலாமையாக கருதவேண்டாம். எமது பெறுமைக்கும் எல்லையுண்டு அரசியல் சாசனத்தின்படி புத்த மதத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் இது பௌத்த நாடு. கடந்த வாரம் குருந்தூர்மலையில் தாதுகோபுரம் அமைக்கும் நிகழ்வு தமிழ்தேசியக்கூட்டமைப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. பௌத்த நாட்டில் பௌத்த சாசனத்தை போஷிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தமை பாரிய அச்சுறுத்தலாக மென உரையாற்றியிருந்தார் அத்துடன் தமிழ் பாராளு மன்ற உறுப்பினர்களை எச்சரித்தும் இருந்தார்.
இவ்வாறான சூழ்நிலையில் நீதிபதி சரவணராஜா அவர்களுக்கு அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் கொடுக்கப்பட்ட அழுத்தம், ஒருபுறம் இருக்க ஒரு நீதிபதிக்கு வழங்கப்படவேண்டிய பொலீஸ் பாதுகாப்பு வேண்டுமென்றே குறைக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி புலனாய்வுப்பிரிவினர் நீதிபதியின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கழுகுபோல் வட்;டமிட்டு அவதானித்து வந்த நெருக்குவாரங்கள் அவரையும் அவரது குடும்பத்தரையும் அச்சுறுத்தும் நடவடிக்கையாகவே இருந்திருக்கிறது. இவற்றின் அடிப்படையிலையே தனக்கு ஏற்படுத்தப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தம் காரணமாக தான் மிகவும் நேசித்துவந்த நீதிபதி பதவியை துறக்க முடிவு செய்ததாகவும் அதன்நிமித்தம் தனது பதவி விலகல் கடிதத்தை நீதி சேவை ஆணைக்குழுவுக்க 23.9.2023 தேதியிட்டு அனுப்பிவைத்ததாக நிதிபதி சரவணராஜா தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவங்களின் பின்னணியை சற்றும் சுருக்கமாக தெரிந்து கொள்வது அவசியமானது , யுத்தம் முடிவுக்க கொண்டுவரப்படுவதற்கு முன்பிருந்தே சுமார் (1960 1983) தற்போது விகாரை நிர்மாணிக்கப்பட்ட இடத்தில் ஆதி ஐயனார் ஆலயம் அமைந்திருந்தது. 1884 ஆம் ஆண்டு ஒதிய மலைப்பகுதியில் இடம் பெற்ற படுகொலைகள் காரணமாக மக்கள் இடம் பெயர்ந்தார்கள். அதன்பின் ஏற்பட்ட சூழ் நிலைகாரணமாக மக்கள் மீள்குடியேறும் வாய்ப்பை இழந்து நின்றார்கள். 2018 ஆம் ஆண்டு இப்பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த சம்புமல்ஸ்கட விஹாராதிபதி கல்கமுவே சாந்தபோதி தேரர் படைசூழ இவ்விடத்துக்கு வருகைதந்து பலாத்காரமாக விகாரை ஒன்றை அமைக்க முற்பட்டிருக்கிறார். அவருடன் தொல்பொருள் திணைக்கள அதிகாரியும் படையினரும் வந்திருக்கிறார்கள்.
வருகை தந்திருந்த தேரர் குருந்தாவ சோமரஜ மஹாவிகாரை என்ற பெயரில் இங்கொரு பூர்வீக விகாரை இருந்ததாகவும், அதை புனரமைக்கப்போவதாகவும் கூறி நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். இந்த வைபத்துக்கு கால்கோள் இட்;டவர்கள் புத்தசாசன அமைச்சர் விதுரவிக்கிரம நாயக்க மற்றும் முல்லைதீவு மாவட்ட இராணுவத்தளபதி. ஆகியோர். ஆரம்பத்தில் இது பெரிதாக கருதப்படவில்லை. வந்தவர்களும் இங்கு விகாரை அமைப்பது எமது நோக்கமல்ல தொல்பொருள் பாதுகாப்பே நோக்கமென குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு மாறாக விகாரை அமைக்கும் பணிகள் சிறிது சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஐயனார் ஆலய சபையினரால் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு அவ்வழக்கின் முடிவு பின்வருமாறு அமைந்திருந்தது. முல்லைத்தீவு நீதிவான் நீதி மன்று (13.9.2018) பின்வரும் கட்டளையை பிறப்பித்திருந்தது. குருந்து மலைப் பிரதேசம் தொல்லியல் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள பிரதேசம் எனவும் அப்பிரதேசத்தில் புதிதாக எவ்வித கட்டிடங்களையும் அமைக்க முடியாது என்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இக்கட்டளையில் பாரம்பரியமான சைவ மக்கள் வழிபாடு செய்ய முடியும் அதை யாரும் தடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இக்கட்டளையை மீறியே புதிய விகாரையொன்று 2022 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதுடன் புத்தர் சிலையும் (12.6.2022) பிதிஸ்டை செய்யப்பட்டது. இந்த விகாரை நிர்மாணத்தில் இராணுவம் பிக்குமார் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பிரதான பங்காற்றியிருந்தார்கள்.
இந்த நிர்மாணப்பணிகளுக்கு எதிராக தமிழ்த்தரப்பில் ஆதி ஐயனார் திருப்பணி சபையினர் அரசியல் வாதிகள் பொது மக்கள் ஒன்று சூடி போராட்டம் நடத்தினார்கள். இது தொடர்பான வழக்கு விசாரணை மாவட்ட நீதிவான் நீதி மன்றில் நீதிபதி ரி. சரவணராஜா முன்னிலையில் கடந்த வருடம் ஒக்டோபர் (13.10.2922) மாதமளவில் விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்குக்கு தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம், மற்றும் பௌத்த பிக்கு ஆகியோர் பிரசன்னமாகியிருந்தார்கள்
இந்தவிசாரணைக்கு முன்பே கடந்த வருடம் 2022 ஜூலை 18 ஆம் திகதி முல்லைத்தீவ பொலீசார் நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்து நீதி மன்றம் விதித்;த உத்தரவின்படி அனுமதியின்றி புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரை உள்ளிட்ட கட்டுமானங்களை அகற்றினால் அமைதியின்மை ஏற்படும் முறுகல் நிலை தோன்றும் என்று தமது வாதத்தை முன்வைத்தனர். அதன்பிரகாரம் மறுநாள் (19.7.2022) வழக்கு விசாரணை இடையில் நிறுத்தப்பட்டு நீதவான, சட்டமா அதிபர் காரியாலய அதிகாரிகள,; சட்டத்தரணிகள், களத்துக்கு விஜயம் செய்தனர். இதன்பிரகாரம் ஏற்கனவே நீதி மன்றினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையான புதிதாக அகை;கப்பட்ட கட்டுமானங்களை அகற்றுமாறு நீதிவான் ரி சரவணராஜாவினால் விதிக்கப்பட்ட கட்டளை மாற்றப்பட்டு அதில் திருத்தம் மேற்கொண்டு 2022 ஆம் ஆண்டு ஆனி மாதத்துக்கு முன் எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலையில் இருக்கவேண்டும் புதிதாக கட்டிடம் நிர்மாணிக்க முடியாது என நீதிபதி கட்டளை பிறப்பித்திருந்தார்.
ஆனால் நீதி மன்ற கட்டளை மீறப்பட்டு கட்டுமான பணிகள் இடம் பெற்றன. இதை ஏற்காத ஐயனார் ஆலய பக்கம் வாதிட்ட சட்டத்தரணிகள் ( நகர்த்தல் பத்திரம் ஊடாக (22.9.2022) நடைபெற்ற சம்பவங்களை விளக்கினர்.. இங்கு பிரசன்னமாகியிருந்த சட்டமா அதிபர் காரியாலய சட்டத்தரணிகள் தமது சமர்ப்பணத்தில் 2020 ஆம் ஆண்டு மன்றில் அறிக்கை ஒன்று எம்மால் தாக்கல் செய்யப்பட்டதற்கு அமையவே குருந்தூர்மலையில் விகாரை நிர்மாணிக்கப்பட்டதாகவும் அது தவறானதல்ல எனவும் தெரிவித்திருந்தனர்.
முல்லைத்தீவு நீதி மன்றில் வழக்கின் தீர்ப்பு (31.7.2923) தீர்க்கப்பட்டதற்கு அமைய நீதி மன்ற உத்தரவை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு தொல்பொருள் திணைக்களத்துக்கு இருந்தும் கட்டளைகள் மீறப்பட்டுள்ளது ச நீதி மன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை. உதாசீனம் செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து தொல்பொருள் திணைக்களம் நீதி மன்றை அவமதித்தமை தெரியப் படுத்தப்பட்டுள்ளது. நீதி மன்ற கட்டளையை மீறி விகாரை அமைக்கப்பட்டுள்ளது எனவே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றுமாறு (22.7.2023 ) நீதி மன்று உத்தரவிட்டிருந்தது. இவை தொடர்பான கூட்டு மொத்த பிரச்சனையே முன்பு குறிப்பிட்டதுபோல் நீதி பதி சரவணராஜாவின் விலகலுக்கு காரணமாகியது.
குருந்தூர்மலை விவகாரத்தில் நீதி மன்ற உத்தரவு மீறப்பட்டமை உத்தரவை மீறி விகாரையின் கட்டுமானங்கள் இடம் பெற்றமையையும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நீதி மன்ற கட்டளைகளை உதாசீனம் செய்தமை கவனத்துக்குரியது மட்டுமன்றி நீதித்தறையின் சுயாதீனத்தையும் சுதந்திரத்தையும் அழித்துவிடும் செயலாகும்.
இதே போன்றதொரு நிலை ஏலவே யாழ் நீதி மன்றில் கடமையாற்றிய யாழ் மாவட்ட நீதிபதி ஸ்ரீ நிதி நந்தசேகரன் மீது இராணுவத்தினரால் மேற் கொள்ளப்பட்ட கொலை முயற்சியையினால் அவர் பதவி விலகியதுபோலவே இச்சம்பவம் இடம் பெற்றிருப்பது நீதித்துறைக்கு சாவுமணி அடிக்கும் செயாகும்.
நன்றி – அக்னியன்