பிரித்தானியாவின் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பதவி விலகுகிறாரா ரிஷி சுனக்!

பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியை பிரதமர் வழிநடத்துவார் என்று வேலை மற்றும் ஓய்வூதியச் செயலாளர் மெல் ஸ்ட்ரைட் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வார தொடக்கத்தில் D-Day நினைவேந்தல்களில் இருந்து விலகியதற்காக அவர் தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொள்வதால், ஜூலை 4 ஆம் திகதி வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக அவர் பதவி விலகலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன.
ரிஷி சுனக்கின் கடுமையான விமர்சகரான முன்னாள் கேபினட் மந்திரி நாடின் டோரிஸ், சுனக் “தனது வாள் மீது விழப் போகிறார் என்று வதந்திகள் இருப்பதாக கூறினார்.
இந்நிலையிலேயே பொதுத் தேர்தலை ரிஷி சுனக் வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 25 times, 1 visits today)