சிரியாவில் இருந்து ஈராக்கிற்கு மாற்றப்படும் IS கைதிகள் : பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் பக்தாத்!
அமெரிக்காவின் மத்தியஸ்த ஒப்பந்தத்தின் கீழ் சிரியாவின் சிறைகள் மற்றும் தடுப்பு முகாம்களில் உள்ள போராளிகளை ஈராக்கிற்கு மாற்றுவது தொடர்பில் வழக்குத் தொடுத்து விசாரணை நடத்துவோம் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஈராக் அரசாங்கம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், 2019 ஆம் ஆண்டில் சிரியாவில் போராளிக்குழு சரிந்ததிலிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 9,000 ஐஎஸ் கைதிகளை ஈராக்கிற்கு மாற்றுவது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையானது ஈராக்கிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என அந்நாட்டு அரசாங்கம் கருதுகிறது.
இது தொடர்பில் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் பேசிய இரு ஈராக் அதிகாரிகள், இதுவரை, 275 கைதிகள் ஈராக்கிற்கு வந்துள்ளனர், அமெரிக்க இராணுவம் அவர்களை விமானம் மூலம் கொண்டு செல்வதால் இந்த செயல்முறை மெதுவாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இன்றைய தினம் மேலும் 125 IS கைதிகள் மாற்றப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈராக் அரசாங்கத்தால் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள குறித்த குழுவினர் பாதுகாப்புப் படையினரால் விசாரிக்கப்பட்டு உள்நாட்டு நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுவார்கள் என்று உச்ச நீதித்துறை கவுன்சில் தெரிவித்துள்ளது. சிரியாவில் நடந்து வரும் முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்க ஈராக் நாடாளுமன்றம் இன்று பிற்பகல் கூடும்” எனத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இஸ்லாமிய அரசு குழு 2017 இல் ஈராக்கில் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் IS ஸ்லீப்பர் செல்கள் இன்னும் இரு நாடுகளிலும் கொடிய தாக்குதல்களை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.





