டிக்டொக்கை வாங்குகிறாரா மஸ்க் : வெளியான செய்தி!

டிக்டோக்கை வாங்குவதாக வெளியான வதந்திகளை எலான் மஸ்க் நிராகரித்துள்ளார்.
சீன உரிமையாளரான பைட் டான்ஸுடன் தேசிய பாதுகாப்பு கவலைகள் காரணமாக அமெரிக்கா கடந்த மாதம் மிகக் குறுகிய காலத்திற்குத் தடை விதித்தது.
இந்நிலையில் குறித்த சமூக ஊடக தளத்தை வாங்க டெஸ்லா முதலாளி ஏலம் எடுக்கவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நான் டிக்டோக்கை வைத்திருந்தால் என்ன செய்வேன் என்பது குறித்து எனக்கு எந்த திட்டமும் இல்லை,” என்று மஸ்க் கூறினார்.
மேலும் அவர் அந்த தளத்தை தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவதில்லை என்றும் தெரிவித்தார்.
(Visited 5 times, 1 visits today)