MH370 விமானம் மாயமானமைக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் தொடர்புள்ளதா? பரபரப்பை கிளப்பிய தகவல்!
இணையம் , யூடியூப் என எந்த சமூக வலைத்தளப் பக்கத்திலும் வேற்றுக்கிரகவாசிகள் குறித்த பல கேள்விகள், சந்தேகங்கள் குறித்த பல்வேறு தகவல்களை படித்திருப்போம்.
அந்தவகையில் x இல் பயனர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன MH370 விமானத்திற்கு அருகில் ஒரு மர்மமான பொருள் பறந்து வருவதாகக் கூறி காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ஆஷ்டன் ஃபோர்ப்ஸ் என்ற X பயனர் காணொலியை பகிர்ந்து இந்த விஷயம் விமானத்திற்கு மிக அருகில் பறக்கிறது, அது ஒரு செயல்பாட்டைக் குறிக்கிறது. இது உலோகக் கோளம் அல்ல, இது உருண்டையைச் சுற்றியுள்ள பிளாஸ்மா புலம். இது அவர்களின் சொந்த ஈர்ப்பு விசையைப் போன்றது. அவர்கள் முன்னோக்கி இழுக்கிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பயனரின் இந்த தகவலை எலான் மஸ்க் மறுத்து டிவிட் செய்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், SpaceX ஆனது சுற்றுப்பாதையில் கிட்டத்தட்ட 6000 செயற்கைக்கோள்களைக் கொண்டுள்ளது. வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான எந்த ஆதாரத்தையும் நான் காணவில்லை, அவ்வாறு இனங்கண்டால் அதனை நான் உடனடியாக பதிவிடுவேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் போயிங் 777 விமானம் மார்ச் 8, 2014 அன்று கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் செல்லும் வழியில் மாயமானது.
கடந்த ஆண்டு, விண்வெளி நிபுணர்களான ஜீன்-லூக் மார்கண்ட் மற்றும் பைலட் பேட்ரிக் பிளெல்லி ஆகியோர் சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டின் படி, விமானம் காணாமல் போனது பற்றிய நுண்ணறிவை வழங்கக்கூடிய புதிய தேடலுக்கு அழைப்பு விடுத்தனர்.
லண்டனில் உள்ள ராயல் ஏரோநாட்டிக்கல் சொசைட்டிக்கு முன்பாக ஒரு விரிவுரையின் போது ஒரு புதிய தேடலின் விளைவாக 10 நாட்களில் விமானத்தை கண்டுபிடிக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
விமானம் மாயமானமை தொடர்பில் தீர்க்க முடியாத சில மர்மமங்கள்
- குறித்த விமானம் புறப்பட்ட 38 நிமிடங்களுக்கு பிறகு தென் சீனக் கடலில் தகவல் தொடர்பு இராணுவ ரேடாரில் இருந்து வியத்தகு முறையில் திசைத் திருப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
- சமிக்ஞை முற்றாக இழக்கப்படுவதற்கு முன்பு இந்தியப் பெருங்கடலை நோக்கி மேற்கு நோக்கி பறந்ததாக கூறப்படுகிறது.
- சில விமான நிபுணர்கள் தெற்கு இந்தியப் பெருங்கடலில் எரிபொருள் தீர்ந்து பல மணி நேரம் பறந்திருக்கலாம் என நம்புகிறார்கள்.
- MH370 விமானத்தில் இருந்து வந்ததாக நம்பப்படும் சுமார் 20 குப்பைகள் மடகஸ்கார், மொரிஷியஸ், ரீயூனியன் மற்றும் ரோட்ரிக்ஸ் தீவுகளிலும், ஆப்பிரிக்க கடற்கரையோரங்களிலும் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அரசாங்கத்தினால் அந்த குப்பைகள் எவ்வாறு பரவிக் கிடந்தது என்பதை கண்டறியமுடியவில்லை.
- எது எவ்வாறாயினும் அந்த விமானத்திற்கு என்ன நடந்தது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.