ரஜினியுடன் இணைகிறாரா மணி ரத்னம்… அதிரடி அப்டேட்

இந்திய சினிமாவில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர் மணி ரத்னம். இவர் இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5ம் தேதி திரையரங்கில் வெளிவரவுள்ளது.
இப்படத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, நாசர், அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்த கவனத்தை ஈர்த்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தக் லைஃப் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இயக்குநர் மணி ரத்னம், கமல் ஹாசன், சிம்பு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், த்ரிஷா என மொத்த படக்குழுவும் ப்ரோமோஷன் போட்டிகள் கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், மணி ரத்னம் அளித்த பேட்டி ஒன்றில், ‘கமலுடன் இரண்டாவது முறையாக இணைத்தபின், ரஜினியுடனும் மணி ரத்னம் இணையப்போகிறார் என்கிற பேச்சு பலமாக உள்ளது’ என கேள்வி கேட்டார்.
இதற்கு பதிலளித்த மணி ரத்னம், “ரஜினி சாரை தான் கேட்கணும்” என கூறினார். பின் “அவருக்கு ஏற்ற மாதிரி கதை இருந்தால், அவருக்கு அதை கேட்க நேரம் இருந்தால், கண்டிப்பாக அவரை நான் கேட்பேன்.
ரொம்ப பெரிய ஸ்டாருடன் படம் பன்றோம் என்றால், அதற்கு ஏற்ற தீனி இருக்க வேண்டும். நான் ஒரு சாதாரணமான கதையை வைத்துக்கொண்டு அவ்வளவு பெரிய ஸ்டார் கிட்ட போகமுடியாது. அவர் பண்ணத்தில் இருந்து வித்தியாசப்படணும், அதே சமயம் அவருடைய மார்க்கெட்டையும் நினைவு வைத்துக்கொள்ள வேண்டும்” என கூறினார் இயக்குநர் மணி ரத்னம்.