மைக்ரோபோன் மூலம் உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் இன்ஸ்டாகிராம்? தலைவர் விளக்கம்
இன்ஸ்டாகிராம் தளம், பயனர்கள் பேசும் உரையாடல்களை மைக்ரோபோனின் மூலம் ஒட்டுக்கேட்கிறதா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.
எனினும் இந்த சந்தேகத்திற்கு அந்தத் தளத்தின் தலைவர் ஆடம் மொஸெரி விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு வீடியோ மூலம் பேசிய அவர், “பயனர்களின் உரையாடலை நாங்கள் ஒட்டுக் கேட்பது இல்லை. இது தனியுரிமை விதிமுறைகளை மீறும் செயலாகும்.
அத்துடன், மைக்ரோபோன் செயல்பட்டால், பயனரின் கையடக்க தொலைபேசியில் அதற்கான அறிகுறிகள் தெரியும், பேட்டரி உலரும்” எனத் தெரிவித்துள்ளார்.
விளம்பரங்கள் தற்செயலாக பயனர்களின் பேச்சு தொடர்பானவை போல தோன்றலாம்.
அதன் பின்புலமாக, அவர்களின் இணைய பழக்கவழக்கங்கள் மற்றும் சமூக வட்டத்தில் உள்ளவர்களின் தேடல்களும் காரணமாக இருக்கலாம்” என அவர் கூறியுள்ளார்.
2016 மற்றும் 2018ஆம் ஆண்டு இதே போன்ற உளவு பார்ப்பது குறித்து எழுந்த குற்றச்சாட்டுகளை மெட்டா நிறுவனம் ஏற்கனவே மறுத்தது குறிப்பிடத்தக்கது.





