பிரித்தானியாவில் இருந்து அயர்லாந்து சென்ற 50 பேர் நாடு கடத்தல்
பிரித்தானியாவில் இருந்து அயர்லாந்து சென்ற 50 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் இருந்து தேவையான விசாக்கள் அல்லது ஆவணங்கள் இல்லாமல் 50 பேர் அயர்லாந்திற்கு வந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அயர்லாந்தின் தேசிய பொலிஸ் மற்றும் பாதுகாப்பு சேவை கடந்த வாரத்தில் இவர்களை கைது செய்துள்ளனர்.
மே மாதம் 20ஆம் திகதி முதல் நான்கு நாட்களுக்கு சோதனைகள் நடத்தப்பட்டன.
அயர்லாந்திற்குள் சட்டவிரோதமாக நுழைய மறுக்கப்பட்டவர்கள், பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறினார்.
தனிப்பட்ட சூழ்நிலைகளைப் பொறுத்து, டப்ளின் துறைமுகத்திலிருந்து ஹோலிஹெட் அல்லது பெல்பாஸ்டுக்கு படகு மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அயர்லாந்திற்கு வரும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தங்குமிடத் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, சமீபத்திய வாரங்களில் டப்ளின் கிராண்ட் கால்வாயில் பல கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், இந்த நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கடந்த வாரம் அப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 100 கூடாரங்களை அகற்றிய பின்னர், கால்வாயில் தடுப்புகளை அமைத்தனர். ஒரு மாதத்தில் மூன்றாவது முறையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.