ஐரோப்பாவை மத்திய கிழக்குடன் இணைக்கும் ஈராக்கின் திட்டம்!
ஐரோப்பாவை வளைகுடாவுடனும் மத்திய கிழக்குடனும் இணைக்கும் புதிய திட்டம் ஒன்றை ஈராக் முன்னெடுத்துள்ளது.
அதற்காக ஈராக் ஒரு பாதையை அமைக்கவிருக்கிறது.
அந்த 17 பில்லியன் டொலர் திட்டம் சூயெஸ் கால்வாயைச் சார்ந்திருக்கும் போக்கை மாற்றக்கூடியது என்று நம்பப்படுகிறது.
புதிய திட்டம், ஈராக்கின் கிராண்ட் பாவ் துறைமுகத்தை, துருக்கியேவுடன் இணைக்கும். அதன்மூலம் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான பயண நேரம் குறையும்.
மணிக்கு 300 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய பயணிகள், சரக்கு ரயில் கட்டமைப்பு அமைக்கப்படும். 3இல் இருந்து 5 ஆண்டுகளுக்குள் அதனைக் கட்டி முடிப்பது திட்டம்.
ஈராக்கின் பொருளியல் எண்ணெய்யை அதிகம் சார்ந்திருப்பதையும் அது குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 11 times, 1 visits today)