அதிக போதைப்பொருளை உற்பத்தி செய்த லெபனானின் தொழிற்சாலையை அழித்த ஈராக்!

அதிக போதைப்பொருள் கொண்ட ஆம்பெடமைன் கேப்டகனை உற்பத்தி செய்யும் லெபனானின் மிகப்பெரிய தொழிற்சாலைகளில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக ஈராக்கின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈராக் மற்றும் லெபனானில் உள்ள உளவுத்துறை நிறுவனங்களுக்கு இடையிலான அரிய பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிழக்கு பெக்கா பள்ளத்தாக்கின் யம்மௌன் கிராமத்தில் அதிக அளவு போதைப்பொருட்களுடன் ஒரு போதைப்பொருள் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது குறித்து லெபனான் இராணுவம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.
குறித்த அறிக்கை வெளியிடப்பட்டு ஒரு மாதத்திற்கு பிறகு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
லெபனான் நடவடிக்கை ஈராக்கிய அதிகாரிகள் பெய்ரூட் தொழிற்சாலை பற்றிய தகவலை வழங்கிய பின்னர் வந்ததாக ஈராக்கின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிராந்திய நாடுகள் போதைப்பொருள் வர்த்தகத்தை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துகின்றன.