ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பம்!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று முதல் (21.05) ஆரம்பமாகவுள்ளன.
இதனை முன்னிட்டு ஈரான் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களும் வணிகங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் அதிபர் மற்றும் வெளியுறவு மந்திரிக்கு தனித்தனியான இறுதி சடங்குகள் வடகிழக்கு நகரமான தப்ரிஸ் மற்றும் புனித நகரமான கோம் ஆகியவற்றில் நடைபெறும்.
முதலாவது அஞ்சலி நிகழ்வு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தலைவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.
ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் அடக்கம் அவர் பிறந்த நகரமான மஷாத் நகரில் வியாழக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 13 times, 1 visits today)