அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் தனது முதல் வெளிநாட்டு பயணமாக ஈராக் சென்றுள்ள ஈரான் அதிபர்
ஈரானிய அதிபர் மசூத் பெஸெஷ்கியன், புதன்கிழமை (செப்டம்பர் 11) அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு ஈராக் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய அதிபரின் முதல் அதிகாரத்துவ வெளிநாட்டுப் பயணம் இது.ஈரானின் ஐஎஸ்என்ஏ செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டது.
ஈரானுடன் தொடர்புடைய சில தரப்புகள், ஆயுதக் குழுக்களை ஈராக் ஆதரிக்கிறது.
2003ஆம் ஆண்டு அமெரிக்கத் தலைமையிலான படையெடுப்பில் ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஆட்சியைக் கவிழ்த்தது முதல் டெஹ்ரான் தொடர்ந்து ஈராக்கில் அதன் அதிகாரத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
“சில ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவது குறித்துத் திட்டமிட்டுள்ளோம். பாக்தாத்தில் ஈராக்கின் மூத்த அதிகாரிகளைச் சந்திக்கவிருக்கிறோம்,” என்று தமது பயணத்துக்கு முன்பாக அதிபர் பெஸெஷ்கியன் கூறியதாக ஈரானிய அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.
ஈராக், அமெரிக்காவிற்கு நட்பு நாடு என்பது குறிப்பிடத்தக்கது