உலகம் செய்தி

பாடசாலைமீதான தாக்குதல் போர்க்குற்றம்: ஐ.நாவின் ஈரான் சுட்டிக்காட்டு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியன தங்கள் நாடுமீது சட்டவிரோதப் போரைத் திணித்துள்ளன என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.நா. சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான், மினாப் பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலை மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலானது போர்க்குற்றமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா துல்லியமான தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதால் இதனை தற்செயலான தாக்குதலாகக் கருதமுடியாது.

எனவே, சர்வதேச சமூகம் இதற்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்த வேண்டும் எனவும் Abbas Araghchi அறைகூவல் விடுத்துள்ளார்.

மேற்படி தாக்குதல் குறித்து அமெரிக்கா இன்னும் முறையானப் பொறுப்பை ஏற்கவில்லை என்றாலும், இது தற்செயலாக நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் அந்நாட்டு ராணுவம் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!