ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஈரானிய பிரதிநிதிகள் பங்கேற்க தடை!
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஈரானிய பிரதிநிதிகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ரொபர்ட்டா மெட்சோலா (Roberta Metsola) இன்று எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்த விடயத்தை அறிவித்தார்.
ஈரானின் அனைத்து இராஜதந்திர ஊழியர்களையும், பிற பிரதிநிதிகளையும் ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகங்களில் இருந்து தடை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய பதிவில், “ஈரானின் துணிச்சலான மக்கள் தங்கள் உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதால், இன்று அனைத்து இராஜதந்திர ஊழியர்களையும், ஈரான் இஸ்லாமியக் குடியரசின் பிற பிரதிநிதிகளையும் அனைத்து ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகங்களிலும் இருந்து தடை செய்ய முடிவு செய்துள்ளேன்.
“சித்திரவதை, அடக்குமுறை மற்றும் கொலை மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட இந்த ஆட்சியை சட்டப்பூர்வமாக்க இந்த அவை உதவாது” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.





