உலகம் செய்தி

ஈரானிய பாடகர் டூமாஜ் சலேஹிக்கு மரண தண்டனை

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ராப் பாடகர் டூமாஜ் சலேஹிக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

33 வயதான டூமாஜ் சலேஹி, 2022 அக்டோபரில் 22 வயதான அமினி பொலிஸ் காவலில் இறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டார்.

ஈரானிய குர்திஷ் பெண்ணான அமினி, இஸ்லாமிய குடியரசின் பெண்களுக்கான கடுமையான ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதற்காக டெஹ்ரானில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமினி உயிரிழந்தார். இதனால் ஈரான் முழுவதும் கடும் எதிர்பு போராட்டம் வெடித்தது.

அப்போது நடந்த கலவரம் தொடர்பாக தூமாஜ் சலேஹி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சலாஹிக்கு எதிரான தண்டனையை தளர்த்த வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் குறிப்பிடுகிறது.

(Visited 22 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி