செய்தி மத்திய கிழக்கு

ஈரானிய ஜனாதிபதி உயிரிழப்பு – ஈரான் ஊடகங்கள் தகவல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சி பயணித்த ஹெலிக்கொப்ரர் முற்றாக எரிந்துசிதறிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

விமான விபத்தில் ஈரான் ஜனாதிபதி ரைசி மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் உயிரிழந்ததை ஈரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

அஜர்பைஜான் மற்றும் ஈரான் எல்லையில் உள்ள மலைப் பகுதியில் காணாமல் போன ஹெலிகாப்டரின் இடிபாடுகளை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர், மேலும் அடர்ந்த மூடுபனி காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று அவர்கள் ஊகித்தனர்.

காடுகள் நிறைந்த மலைப்பகுதியில் ஹெலிக்கொப்ரர் எரிந்துகிடக்கும் தடயத்தைக் காட்டுகின்ற ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. வெப்பப் பொருள்களை அடையாளம் காணக்கூடிய துருக்கி நாட்டின் விசேட தேடுதல் ட்ரோன் மூலமே ஹெலியின் சிதைவுப் பகுதி அடையாளங்காணப்பட்டிருக்கிறது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!