கடும் வறட்சியுடன் போராடும் ஈரான் – நீர் விநியோகத்தை குறைக்க பரிசீலனை!
ஈரானில் கடுமையான வறட்சி நிலவுகின்ற நிலையில், தண்ணீர் விநியோகத்தில் கட்டுப்பாடுகளை கொண்டுவர அந்நாட்டு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய தெஹ்ரானில் வாழும் 10 மில்லியன் மக்களுக்கு அவ்வவ்போது தண்ணீர் விநியோகத்தை நிறுத்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஈரானில் இவ்வாண்டில் மழை பொழிவு மிகக் குறைவாக பதிவானதாகவும், சில இடங்களில் மழைபொழிவே பதிவாகவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் நீர் விநியோகம் செய்யும் 05 நீர்த்தேக்கங்களில் ஒன்று வரண்டு போயுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எஞ்சிய நீர்த்தேக்கங்களில் 14 மில்லியன் கன லிட்டர்கள் மட்டுமே இருப்பதாகவும் இது மக்களின் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க போதுமானது அல்ல எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(Visited 3 times, 3 visits today)




