ஓமன் வளைக்குடாவில் இலங்கையர்கள் பயணித்த கப்பலை சுற்றிவளைத்த ஈரான்!
ஓமன் வளைக்குடாவில் பயணித்த எரிபொருள் டேங்கர் கப்பலை நேற்று ஈரானிய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த கப்பலில் இலங்கையர்கள் உட்பட 18 பேர் பயணித்ததாகவும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையர்களைத் தவிர, கைது செய்யப்பட்ட பணியாளர்களில் இந்தியர்கள் மற்றும் வங்கதேசத்தினர் அடங்குவர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
6 மில்லியன் லிட்டர் எரிபொருளை சட்டவிரோதமாக கடத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நிறுத்த உத்தரவுகளை புறக்கணித்தல், தப்பிச் செல்ல முயன்றது மற்றும் கப்பலின் ஆவணங்களில் உள்ள குறைபாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நேற்று பிற்பகல் கப்பல் பறிமுதல் செய்யப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக ஈரான் இதுபோன்ற பல கப்பல்களைக் கைப்பற்றியுள்ளது.
உலகின் மிகக் குறைந்த எரிபொருள் விலைகளைக் கொண்ட ஈரானில் இருந்து கடல் வழியாக அண்டை நாடுகளுக்கு எரிபொருள் கடத்தல் பொதுவானது என்றும் வெளிநாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன.





