ஈரானில் இரண்டு அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் – கதிரியக்க கசிவு?
ஈரானில் இரண்டு அணுசக்தி தொடர்பான நிலையங்கள் தாக்கப்பட்டதாக அரசு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எனினும், எந்தவித கதிரியக்க கசிவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வடமேற்கு ஈரானில் அமைந்துள்ள கோண்டாப் கனநீர் வளாகம் அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுப் படைகளால் தாக்கப்பட்டதாக Islamic Republic News Agency (IRNA) தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என மார்க்கஸி மாகாண அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், யஸ்த் மாகாணத்தின் அர்தகான் நகரில் உள்ள யெல்லோகேக் உற்பத்தி நிலையமும் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த இடத்திற்குப் புறம்பாக கதிரியக்கப் பொருட்கள் கசியவில்லை என Fars News Agency தெரிவித்துள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.




