ஈரானில் 723 கல்வி நிலையங்கள்மீது தாக்குதல்: 250 மாணவர்கள் பலி!
ஈரான்மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போரினால் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள இழப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமான இப்போரில் இதுவரையில் ஈரானில் 250 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரான் கல்வி அமைச்சு இந்த தகவலை இன்று (27) வெளியிட்டுள்ளது.
மனித உயிரிழப்புகள் மட்டுமின்றி, சுமார் 723 கல்வி மற்றும் கலாச்சார நிலையங்கள் இந்தத் தாக்குதல்களால் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இராணுவ இலக்குகள் மட்டுமின்றி பொதுமக்கள் குடியிருப்பு, கல்வி நிலையங்கள் உள்ளிட்டவை தாக்கப்படுவது தொடர்பில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்மீது கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.





